யாதும் ஊரே | அயலகத்தில் பெரியாரின் தேவை
27-Sep-2014
இன்று வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நாள்...
ஆடம்பரம், ஆணவம் மற்றும் அடக்குமுறை; இவை அனைத்தையும் கொண்ட ஒருவருக்கு...
தமிழ்நாட்டின் இரும்பு பெண்மணி என்ற இறுமாப்பு கொண்ட ஒருவருக்கு...
பெண்ணின் மீது, ஆசிட் வீசுவதற்கும், பெண்களை உயிரோடு பேருந்தினுள் வைத்து எரித்துக் கொல்லவும் தயங்காத கூட்டத்தின் தலைவி ஒருவருக்கு...
தமது கட்சியினரையும், அரசு இயந்திரத்தையும் தனது உருட்டல் மிரட்டல்களால், உருட்டிச் சென்ற ஒருவருக்கு...
சிறைச்சாலையில் ஊதுவத்தி உருட்டுவது எப்படி என்று கற்றுத்தர ஆணை இடப்பட்ட நாள்...
முன்பொரு முறை, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருந்தபோது, நிறுவனத்தில் புதிய developerகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, நேர்முகத்தேர்வுகள் நடைபெற இருப்பதாகவும்; அதற்கு, எங்களுக்கு தெரிந்த நபர்களை பரிந்துரைக்கும்படியும்(employee referral) மின்னஞ்சல் வாயிலாக கேட்டுக்கொண்டனர். பரிந்துரைக்கும் நபர் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் பெற்றவராக இருத்தல் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நார வாய் சும்மா இருந்தாலும், நம்ம வாய் சும்மா இருக்காதல்லவா...நான் ஆள்சேர்ப்பு நடத்தும் மனிதவள அதிகாரியை தொடர்புகொண்டு, 'நாம் ஏன் வேலை இல்லாதவர்களையோ, அல்லது கலோரிகளுக்கு சென்று வளாக நேர்முகத்தேர்வுகளின் மூலமாகவோ, புதியவர்களை தேட கூடாது. ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு எதற்காக மீண்டும் வேலை தரவேண்டும் ?' என்று வினவினேன்.
அவர்கள் சொன்ன பதில்...கல்லூரிகளிலோ, இதுவரை வேலை செயாதவர்களையோ தேர்ந்தெடுத்தால், அவர்களுக்கு ஆதி முதல் பயிற்சி கொடுக்க வேண்டும். அவர்கள் industry-ready ஆக இருக்க மாட்டார்கள். ஆனால் அதுவே, ஒருவருடம் அனுபவம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்தால், அவர்கள் பயிற்சி அனைத்தும் முடித்து, project -ல் அமர தயாரானவர்களாக இருப்பார்கள்.
நம்நாட்டில், Infosys, Wipro, Cognizant மற்றும் TCS போன்ற நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு சென்று ஆள்சேர்த்து, பயிற்சி அனைத்தும் அளித்து அவர்களை தயார் படுத்தி வைத்திருப்பார்கள், நாம் அவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். நமக்கு நேரமும், பணமும் மிச்சம். இது நமது ஆட்சேர்ப்பு உத்திகளுள் ஒன்று' என்றனர்.
அதைப்போல, எதற்கு தேர்தலில் நின்று, வீதி வீதியாக அலைந்து, பொதுக்கூட்டங்களில் பேசி, தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, அதன்பிறகும் மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்களா இல்லையா என்று தெரியாமல் அல்லல்படுவது எல்லாம்...எந்த கட்சிக்காரன் வேண்டுமானால் ஜெயிக்கட்டும்...அவனை விலை கொடுத்து வாங்கிவிட்டால் போச்சு...
எதிரியின் கோட்டைக்குள் சென்று போரிட்டு
மார்பில் ஈட்டி வாங்குபவன் மாவீரன்!
தன்மக்களை மட்டுமின்றி தன்மகனையும்
மனித கேடயமாக காட்டி பிழைத்தவன்?
தாய்ப்பறவை தனைக்காக்கும் என்றெண்ணிய தன்மக்களை
பருந்திடம் அளித்துப் பொந்தினுள் ஒளிந்தான்!
சொந்த பிஞ்சுகள் கறித்துண்டங்களாய் கிடக்கையிலே
பொந்துவிட்டு பொந்துமாரிய அவன் சொந்தமாய் நினைத்தது அவனுயிரை மட்டும்தானா!
தலைவனாக தான் சரணடைந்திருந்தால்
லட்சம் உயிர் பிழைத்திருக்குமே!
தன்மக்கள் உயிரை மட்டும் துச்சமென நினைத்ததால்
அவனுயிரும் பிழைக்கவில்லையே!
இந்தியாவின் தலைமகனைத் தமிழகத்திலே கொண்று
தமிழகத்தின் தலைமகனாம் என் தலைவனுக்கு பழியுண்டாக்கினான்!
துப்பாக்கிகளும் பீரங்கிகளும் மட்டுமல்ல
சாதுர்யமும் சாணக்கியமும்தான் பேராயுதம்!
அவைதவிர்த்த இவன் என் தலைவனை நிராயுதபாணி ஆக்கினான்!
கவலையின்றிச் செத்தொழிந்த அவன் தியாகியாகி நின்றான்
கையறு நிலையில் கவலைப்பட்ட என் தலைவன் துரோகியெனும் பட்டம் சுமந்தான்!
எதையும் தாங்கும் இதயம் கொண்டவனவன் இதையும் தாங்குவான் !
செய்தி: அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் ஆகியவற்றில் 6முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்தியேகமாக உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்திருந்தார்.
எனக்கு தெரிஞ்சு இந்த வரிசையில் நிகழ்வுகள் இருக்கும்:
இந்த வருட மருத்துவ சேர்க்கை முடிந்த பிறகு, 2021 சட்டமன்றதேர்தலுக்கு முன்பாக இந்த அவசர சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும்...
அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கிறாரா இல்லையா என்பது வேறு விசயம்.
2021 தேர்தலில் கூடுதல் வாக்கு வாங்க இந்த சட்டம்/அறிவிப்பை அதிமுக பயன்படுத்தும்...
தேர்தல் முடிந்த கையோடு, இந்த சட்டத்தை எதிர்த்து ews கூட்டம் வழக்கு தொடுக்கும்...இந்த சட்டம் நடைமுறைப் படுத்துவதற்கு முன்பே, குப்பையில் வீசப்படும்...
இதற்கு ஒரே தீர்வு, எந்த நிபந்தனையுமற்ற, நிரந்தர NEET ஒழிப்பு மட்டுமே...
இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு மேலும் பல பாதகங்களை ஏற்படுத்தும் என்பது அடிமை அரசுக்கு தெரியாதா, அல்லது வெளிவேசமா என்பதை மக்களே முடிவு செய்வர்.
தமிழ்நாடு கண்ட முதல் முதல்வர்...
மாபெரும் தமிழ்க்கனவு கண்ட தமிழ்நாட்டின் தலைமகன்...
எங்கள் திராவிட இனத்தின் அடையாளம்...
'I belong to the Dravidian stock' என்ற சிம்மக் குரலுக்கு சொந்தக் காரர்...
திராவிடம் பரப்பிய பெரியாரின் தளபதி...
பெரியாரின் திராவிடம் என்ற கசப்பு மருந்தை...மக்களுக்கு தேன் தடவி புகட்டியவர்...
அதிகாரம் கைகூடாவிட்டால், மக்களுக்கு நல்வாழ்வு கைகூடாது என்ற தொலைநோக்கு பார்வை கொண்டவர்...
திராவிடத்தை, இயக்க அரசியலில் இருந்து, அதிகார அரசியலை நோக்கி நகற்றியவர்...
ஆள்வது என்பது அதிகாரம் அல்ல, அது பொறுப்பு என்று உணர்த்தியவர்...
ஆண்டது இரண்டு ஆண்டுகள்தான்...அதிலும் தமிழ்நாட்டை ஆண்டது வெறும் 20 நாட்கள்தான்...
ஆனால் தமிழ்நாடு என்ற பெயர் நிரந்தரம்...
அந்த பெயர் இருக்கும்வரை அவர்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்...
வாழ்க அண்ணா புகழ்! வளர்க திராவிடம்!
மொத்த ஆஸ்திரேலியாவிலும் கொரோனா இல்லை; ஆனால் விக்டோரியா மாநிலத்தில் மட்டும் கொரோனா இரண்டாவது ரவுண்டு ஓடிட்டு இருக்கு; அதனால லாக்டவுனும் போயிட்டு இருக்கு. இதுல ஒருத்தன் பட்டர் சிக்கன் வாங்கறதுக்கு 25 km கார எடுத்துட்டு போனான்னு சொல்லி, அவனுக்கு 1682 டாலர் அபராதம் போட்டிருக்காங்க...நம்ம ஊரு காசில் 90000 ஓவா...
பிள்ளைகளுடன் வந்து தங்கியிருக்கும் பெற்றோர் பாடு இன்னும் திண்டாட்டம். அவர்கள் ஒரு நாலு இடம் சுத்தி பாக்கலாம்னு இங்க வந்தா, எல்லாரையும் உயிரோட இருக்கறதுதான் முக்கியம், அதனால வீட்ல உக்காருங்கன்னு சொல்லிடுச்சு நம்ம கொரோனோ...
இப்படித்தான் பக்கத்து வீட்டில ஒரு அங்கிள் உக்ரைன் நாட்டில இருந்து வந்திருக்கார்...பாவம் அவருக்கு இங்கிலீசும் சுத்தமா தெரியல... வீட்டுக்கு வெளியில் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு வேலை செஞ்சிட்டு இருப்பார்...அவரோட 5 மற்றும் 2 வயது பேர பிள்ளைகள் வேற இங்கயே பிறந்ததால், அவங்களுக்கு உக்ரேனியன் வரல...எனக்கு cast away படம்தான் ஞாபகம் வரும்...அதுமாதிரியே உக்காந்து ஒவ்வொரு வேலையா செஞ்சிட்டு இருந்தார்...பார்க்கும் போதெல்லாம் ஏதாவது பேச முயற்சி பண்ணுவார், நானும் ஏக் காவுன் மெய்ன் ஏக் கிஸ்ஸான் ரகு தாத்தா மாதிரியே கேட்டுட்டு வந்திடுவேன்...
ஒரு நாள் இப்படித்தான், அவர் பேச ட்ரை பண்ணும்போது, நான் முழிச்சிட்டே நின்னுட்டு இருக்கும்போது, என்னை இருன்னு சொல்லிட்டு உள்ள ஓடினார்...ஏதாவது சாப்பிட கொண்டுவர போறாரான்னு பார்த்துட்டு நின்னுட்டு இருந்தா, கையில போன தூக்கிட்டு வந்தார்...என் முன்னாடியே உக்ரேனிய மொழியில என்னமோ சொல்லிட்டு, என்கிட்டே காமிச்சார்...
அட நம்ம கூகுள் ட்ரான்ஸ்லேட்டர்...அவர் உக்ரேனிய மொழியில் சொன்னதை இங்கிலீஷிலே காமிச்சிட்டு இருந்தது...அட இந்த ஐடியா நமக்கு கிளிக் ஆகாம போச்சேன்னு நினைச்சுக்கிட்டேன்...அதற்குப்பிறகு நிறைய தடவை அவர்கூட கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் வச்சி பேசிட்டேன்...
ஒரு இடத்தில போய் survive ஆகணும்னா, இன்னிக்கு இருக்கற high tech உலகத்தில ஆயிரம் வழி இருக்கு...இவனுங்க என்னடான்னா, உள்ளூர்ல பானி பூரி வாங்கி திங்க இந்தி படிங்கன்னு சொல்லிட்டு திரியராங்க ....
எங்க ஊரு ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சை புளியம்பட்டி. உள்ளாட்சி அமைப்பின்படி பேரூராட்சியாக இருந்து, சமீபத்தில் நகராட்சியாக மாறிய ஒரு சிறிய நகரம். அதே ஊரில் அமைந்துள்ள அரசாங்க ஆண்கள் பள்ளியில்தான் நான் படித்தேன். அங்கு ஒரு ஆசிரியர் இருந்தார், இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டார். எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கக் கூடிய நல்ல ஆசிரியர்;
காலை மற்றும் மாலை நேரங்களில் டியூசன் தனியாக எடுப்பார். அதே ஊரில் உள்ள பெண்கள் படிக்கும் பள்ளியில் இருந்தும் இவரிடம் டியூசன் படிக்க வருவார்கள். டியூசன் co-ed முறையில் நடக்கும். அவரிடம் டியூசன் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், ஒரே வருடத்தை சேர்ந்தவர்களை கூட, இரண்டு குழுக்களாக பிரித்து, காலை மற்றும் மாலை என்று மாற்றி மாற்றி டியூசன் எடுப்பார்.
அவர் டியூசன் எடுக்க ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து இருந்தார். அந்த இடத்தில் முன்புறம், தென்னை ஓலை கொண்டு பந்தல் அமைக்கும் கடையும், பின்புறம் இவரது டியூசன் எடுக்கும் இடமும் அமைந்திருந்தது. அதனால் மனிதருக்கு தனியாக பிரம்பு வாங்க வேண்டிய செலவு மிச்சம். மேலும் சமயத்தில் மனிதருக்கு, நல்ல பச்சை மட்டையாக கிடைத்துவிடும்.
அவர் கொடுத்த வீட்டு பாடத்தை செய்யவில்லை என்றால் மனிதர் buttockல் ரத்தம் பார்க்கும் வரை அடித்த சமயங்களும் உண்டு. மாணவிகள் என்றால் உள்ளங்கை தடிக்கும் அளவிற்கு அடி விழும். நாள்பட, மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாத நாளன்று, மூன்று அரைக்கால் சட்டை அணிந்து வந்த நாட்களெல்லாம் உண்டு. மாணவர்கள் மூன்று layer அணிந்திருப்பது தெரிந்தால், அதை கழட்ட சொல்லியும் அடி விழும்.
அவரிடம் டியூசன் படிக்க, எங்கள் ஊரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்து எங்கள் பள்ளியில் படிக்கும் நிறைய மாணவர்கள் செல்வது வழக்கம். அந்த மாணவர்களை அவரிடம் கொண்டு வந்து சேர்க்கும் பெற்றோரின் ஒரே எதிர்பார்ப்பு கூட, அவர்கள் பிள்ளைகள் அந்த வருட தேர்வில் பாஸ் ஆவதாக மட்டுமே இருக்கும்.
அந்த ஆசிரியரிடம்,பெற்றோர் கண்ணீருடன் வைக்கும் ஒரு வேண்டுகோள், 'சார்! அடிக்கும் போது கண்ணுல பட்டுடாம அடிங்க சார்'. ஆனால் யாருமே அடிக்காதீங்க என்று கூறியதில்லை.
அதற்கு காரணம், அவர் அப்படி அடித்தாவது நம்ம பையன பெண்ணை, படிக்க வைத்துவிடுவார் என்ற நம்பிக்கை; நாமதான் படிக்கல, நம்ம பசங்களாவது எப்படியாவது படிச்சிரட்டும் என்ற தவிப்பு மற்றும் படிப்பு மட்டுமே நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்ற ஒரு எளிய பொது அறிவு.
அப்படி பல இன்னல்களை தாண்டி படிக்க வரும் எளிய எளிய பின்புலம் கொண்ட மாணவர்களை, இரு கரம் கொடுத்து தூக்கி விடுவதே ஒரு அரசின் கடமையாக இருக்க வேண்டும். அத விட்டுட்டு, உனக்கு பொது தேர்வு வைக்கிறேன், NEET தேர்வு வைக்கிறேன் என்று மேலும் சாவடிக்காதீங்க!
Oracle Australia-ல வேலை பாக்குறேன்; இன்னிக்கு காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளிய விட்டிருக்காங்க...என்னதான் கம்பெனி உலகத்தில எல்லா நாட்டிலும் இருந்தாலும் head office இருக்கறது Redwood Shores, California. Oracle-ஓட பங்கு (share) பட்டியலிடப்பட்டிருப்பதும் New York Stock Exchangeல். அதனால Oracleன் ஜிடிபி பங்களிப்பு எல்லாம் அமெரிக்காவிற்கே சென்று சேரும்.
இதுக்கு முன்னாடி வேலை பார்த்த Cognizant-ம் அதே கதைதான். காக்னிசண்ட்-ன் மிகப்பெரிய work force strength சென்னைலதான் உக்காந்து இருக்காங்க...ஆனா காக்னிசன்ட்டின் head office இருப்பதும் New Jersey, America. அதனால காக்னிசண்ட்டின் ஜிடிபி பங்களிப்பும் அமெரிக்காவுக்குத்தான் போகும்.
நீயா நானா கோபிநாத் அண்ணன், திரு சுரேஷ் சம்பந்தம் அவர்களை எடுத்த நேர்காணலை பார்க்க நேரிட்டது...அந்த நேர்காணலில் திரு சுரேஷ் அவர்கள் தமிழ்நாடு பற்றி கொடுத்த புள்ளி விவரங்கள் மிகவும் வியப்புக்கு உரியதாக இருந்தது...அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த விவரம், உண்மையில் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு விவரம்தான்.
தமிழ்நாடு ஜிடிபியில் இரண்டாவது பெரிய மாநிலம் என்றுதான் இதுவரையில் அனைவருமே கூறி வந்தது, ஆனால் அதற்கு காரணம், தமிழ் நாட்டில் தொழில் நடத்தும் நிறைய நிறுவனங்கள் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்குவதே என்ற விவரம்.
அடேய் தமிழ் நாடு ஜிடிபில ரெண்டாவது மாநிலம்டானு சொல்லும்போது கூட, அதுக்கு காரணம் திமுகதான், அவிங்க மட்டும் இல்லேன்னா தமிழ்நாடு முதல் மாநிலமா இருந்திருக்கும்ங்கற template-ஓட எவனாச்சும் வாங்கடா...