Ukrane
மொத்த ஆஸ்திரேலியாவிலும் கொரோனா இல்லை; ஆனால் விக்டோரியா மாநிலத்தில் மட்டும் கொரோனா இரண்டாவது ரவுண்டு ஓடிட்டு இருக்கு; அதனால லாக்டவுனும் போயிட்டு இருக்கு. இதுல ஒருத்தன் பட்டர் சிக்கன் வாங்கறதுக்கு 25 km கார எடுத்துட்டு போனான்னு சொல்லி, அவனுக்கு 1682 டாலர் அபராதம் போட்டிருக்காங்க...நம்ம ஊரு காசில் 90000 ஓவா...
பிள்ளைகளுடன் வந்து தங்கியிருக்கும் பெற்றோர் பாடு இன்னும் திண்டாட்டம். அவர்கள் ஒரு நாலு இடம் சுத்தி பாக்கலாம்னு இங்க வந்தா, எல்லாரையும் உயிரோட இருக்கறதுதான் முக்கியம், அதனால வீட்ல உக்காருங்கன்னு சொல்லிடுச்சு நம்ம கொரோனோ...
இப்படித்தான் பக்கத்து வீட்டில ஒரு அங்கிள் உக்ரைன் நாட்டில இருந்து வந்திருக்கார்...பாவம் அவருக்கு இங்கிலீசும் சுத்தமா தெரியல... வீட்டுக்கு வெளியில் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு வேலை செஞ்சிட்டு இருப்பார்...அவரோட 5 மற்றும் 2 வயது பேர பிள்ளைகள் வேற இங்கயே பிறந்ததால், அவங்களுக்கு உக்ரேனியன் வரல...எனக்கு cast away படம்தான் ஞாபகம் வரும்...அதுமாதிரியே உக்காந்து ஒவ்வொரு வேலையா செஞ்சிட்டு இருந்தார்...பார்க்கும் போதெல்லாம் ஏதாவது பேச முயற்சி பண்ணுவார், நானும் ஏக் காவுன் மெய்ன் ஏக் கிஸ்ஸான் ரகு தாத்தா மாதிரியே கேட்டுட்டு வந்திடுவேன்...
ஒரு நாள் இப்படித்தான், அவர் பேச ட்ரை பண்ணும்போது, நான் முழிச்சிட்டே நின்னுட்டு இருக்கும்போது, என்னை இருன்னு சொல்லிட்டு உள்ள ஓடினார்...ஏதாவது சாப்பிட கொண்டுவர போறாரான்னு பார்த்துட்டு நின்னுட்டு இருந்தா, கையில போன தூக்கிட்டு வந்தார்...என் முன்னாடியே உக்ரேனிய மொழியில என்னமோ சொல்லிட்டு, என்கிட்டே காமிச்சார்...
அட நம்ம கூகுள் ட்ரான்ஸ்லேட்டர்...அவர் உக்ரேனிய மொழியில் சொன்னதை இங்கிலீஷிலே காமிச்சிட்டு இருந்தது...அட இந்த ஐடியா நமக்கு கிளிக் ஆகாம போச்சேன்னு நினைச்சுக்கிட்டேன்...அதற்குப்பிறகு நிறைய தடவை அவர்கூட கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் வச்சி பேசிட்டேன்...
ஒரு இடத்தில போய் survive ஆகணும்னா, இன்னிக்கு இருக்கற high tech உலகத்தில ஆயிரம் வழி இருக்கு...இவனுங்க என்னடான்னா, உள்ளூர்ல பானி பூரி வாங்கி திங்க இந்தி படிங்கன்னு சொல்லிட்டு திரியராங்க ....
0 Comments:
Post a Comment
<< Home