நீலம்!!
நீலம் எனக்கு பிடிக்காத வண்ணம்தான்...
இரவின் அழகில் வானத்தையும், வானத்து நிலவையும் ரசிப்பவன் நான்...
இன்று அந்த அழகிய வெண்ணிலா,
வானத்தின் மீது பகை கொண்டு...
மேகத்தின் மீது சினம் கொண்டு...
தரையிறங்கி வந்தது எனைக்கண்டு...
தரையிறங்கி வரும்போது...
பகை கொண்ட நீல வானத்தை உடையாகவும்...
சினம் கொண்ட கருமேகத்தை சிகையாகவும்...
கொண்டு வந்ததால்...
நீலம் கூட இன்று அழகாய் தெரிகின்றது!!
0 Comments:
Post a Comment
<< Home