DreamLand

Wednesday, December 04, 2019

அழகிய கனவொன்று கண்டேன்!

பனி விழும் மாலை நேரம்!
ஆள் அரவமற்ற ஆற்றங்கரை ஓரம்!

பெய்து விடட்டுமா எனக் கேட்கும் மேகம்!
குளிர்கிறதா எனக் கேட்கும் வாடைக் காற்று!!

என் அருகினில் மிக அழகான அவள்!
அவள் கைவிரல் கோர்த்து நடக்கும் நான்!

என் தோளில் சிரம் சாய்த்து நடக்கிறாள் அவள்!
அவள் கூந்தலைக் கரம் கொண்டு கோதி விடுகிறேன் நான்!

என் தொடுதலில் சிணுங்கினாள் அவள்!
அவள் சிணுங்கல்களுக்காகவே பலமுறை தொடுகிறேன் நான்!

உதடுகள் நான்கும் உரசிக் கொண்ட நேரம,
'சீ! எச்சில்!', என்கிறாள் அவள்!

'இல்லை நான் ருசித்தது உண்மையான தேண்!', என்கிறேன் நான்!

'தினமும் மாலையில்
உன்மீது தலை சாய்த்து உறங்கிட வேண்டும்!', என்கிறாள் அவள்!

'நாள் முழுதும் மாலையாகவே இருந்திட வேண்டும்!', என்கிறேன் நான்!

நாம் பதில் சொல்லாத கோபத்தில்,
காற்று தான் வீசுவதை நிறுத்திக் கொண்டது!
ஆனால் மேகமோ பெய்துவிட்டது!

'ஐயோ! மழை!', என்கிறாள் அவள்!
'இல்லை! நம் கூடுதலுக்காக வானம் கூறும் வாழ்த்துக்கள்!
அந்த இடியோசை, எனக்கு மேளச்சத்தம்!
அந்த மின்னல், எனக்கு வண்ணவிளக்கு!
இந்த மழைத்துளிகள், நம்மீது தெளிக்கப்பட்ட பன்னீர்த் துளிகள்!', என்கிறேன் நான்!

'வெளியில் செல்ல நேரமாகிவிட்டது! எழுந்திருடா!',
என்று ஒரு குரல்! இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறேனே,
என்று யோசித்தபோதுதான் பார்த்தேன்...

என் மீது தண்ணீரைத் தெளித்து
எழுப்பிக் கொண்டிருந்தார், என் அப்பா!

~