Why contest in Elections...buy MLAs
முன்பொரு முறை, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருந்தபோது, நிறுவனத்தில் புதிய developerகளை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, நேர்முகத்தேர்வுகள் நடைபெற இருப்பதாகவும்; அதற்கு, எங்களுக்கு தெரிந்த நபர்களை பரிந்துரைக்கும்படியும்(employee referral) மின்னஞ்சல் வாயிலாக கேட்டுக்கொண்டனர். பரிந்துரைக்கும் நபர் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் பெற்றவராக இருத்தல் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நார வாய் சும்மா இருந்தாலும், நம்ம வாய் சும்மா இருக்காதல்லவா...நான் ஆள்சேர்ப்பு நடத்தும் மனிதவள அதிகாரியை தொடர்புகொண்டு, 'நாம் ஏன் வேலை இல்லாதவர்களையோ, அல்லது கலோரிகளுக்கு சென்று வளாக நேர்முகத்தேர்வுகளின் மூலமாகவோ, புதியவர்களை தேட கூடாது. ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு எதற்காக மீண்டும் வேலை தரவேண்டும் ?' என்று வினவினேன்.
அவர்கள் சொன்ன பதில்...கல்லூரிகளிலோ, இதுவரை வேலை செயாதவர்களையோ தேர்ந்தெடுத்தால், அவர்களுக்கு ஆதி முதல் பயிற்சி கொடுக்க வேண்டும். அவர்கள் industry-ready ஆக இருக்க மாட்டார்கள். ஆனால் அதுவே, ஒருவருடம் அனுபவம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்தால், அவர்கள் பயிற்சி அனைத்தும் முடித்து, project -ல் அமர தயாரானவர்களாக இருப்பார்கள்.
நம்நாட்டில், Infosys, Wipro, Cognizant மற்றும் TCS போன்ற நிறுவனங்கள் கல்லூரிகளுக்கு சென்று ஆள்சேர்த்து, பயிற்சி அனைத்தும் அளித்து அவர்களை தயார் படுத்தி வைத்திருப்பார்கள், நாம் அவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். நமக்கு நேரமும், பணமும் மிச்சம். இது நமது ஆட்சேர்ப்பு உத்திகளுள் ஒன்று' என்றனர்.
அதைப்போல, எதற்கு தேர்தலில் நின்று, வீதி வீதியாக அலைந்து, பொதுக்கூட்டங்களில் பேசி, தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, அதன்பிறகும் மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்களா இல்லையா என்று தெரியாமல் அல்லல்படுவது எல்லாம்...எந்த கட்சிக்காரன் வேண்டுமானால் ஜெயிக்கட்டும்...அவனை விலை கொடுத்து வாங்கிவிட்டால் போச்சு...
0 Comments:
Post a Comment
<< Home