என்ன வாழ்க்கை இது?இதுவரை படித்ததன் பலன்,
10-வது பரிட்சையில் நல்ல மதிப்பெண்
எடுத்து PASS-ஆவதில் என்றார்கள - எடுத்தேன்!
+2-வில் நல்ல மதிப்பெண் எடுத்து,
நல்ல கல்லூரியில் சேர்ந்துவிடு, பிறகு
எந்த பிரச்சினையுமில்லை என்றார்கள் - சேர்ந்தேன்!
Assignments, Exams, Arrears, Projects என
பயமுறுத்திக் கொண்டிருந்த வேளையில்
Campus Interview-வில் select-ஆகி விட்டால்
Career settled என்றார்கள்!
நான் படிக்கும் போதுதானா US-ல்
Recession வரவேண்டும்? அதையும் மீறி வந்த
இரண்டு Company-களில் ஒன்றில் வேலையும் வாங்கினேன்!
Bugs, Deadlines, Performance, Appraisal என
பல முனைத்தாக்குதல்கள்!
இந்த தாக்குதல்களுக் கிடையில்
நண்பர்கள் அனைவரும்
எனதை விட நல்ல வேளையில்
எனனை விட நல்ல சம்பளத்தில்
சேர்ந்த விட்டார்கள்!
போட்டி போட்டே ஆக வேண்டும்!
பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்!
உலகம் முழுதும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உழைத்தேன்!
பணி முடிந்த காலை 3 மணியிலிருந்து
பேருந்து வரும் 5 மணி வரையிருந்த
இரண்டு மணி நேர இடைவெளியில் கூடப் படித்தேன்!
உலகம் உழைத்துக் கொண்டிருந்த வேளையில்
நேர்முகத் தேர்வுகளில் நித்திரையுடன் அமர்ந்திருந்தேன்!
மூன்று மாத முயற்சி வீண் போகவில்லை!
வேறு வேலை வாங்கி விட்டேன்!
நல்ல Company, நல்ல சம்பளம்!
ஆனால் இங்கும் அதே தாக்குதல்கள்!
புதிது புதிதாக வரும் Technology-களைப் படிக்க வேண்டும்!
Promotion-காக உழைக்க வேண்டும்!
MBA படித்து விடு, நல்ல பதவி விரைவில்
கிடைக்குமென சித்தப்பா சொல்கிறார்!
நகரத்தில் ஒரு வீடு வாங்க அப்பா சொல்கிறார்!
திருமணத்திற்கு நகை சேர்க்க அம்மா சொல்கிறார்!
வெளிநாடு சென்று
இரண்டாண்டுகள் வேலை செய்தால்
இவையனையத்தையும் பூர்த்தி செய்துவிடலாம்,
நண்பர்கள் சொல்கிறார்கள்!
போதுமடா சாமி! போராட்டத்திலேயே,
வாழ்க்கையின் அத்தனை நாட்களையும் இழந்து விட்டால்,
என் வாழ்க்கையை நான் வாழ்வது எப்போது?
இயற்கையுடன் ஓர் உரையாடல்,
மாலையுடன் ஒரு மோதல்,
இரவுடன் ஒரு ஊடல்,
மாலையும் இரவும் சந்தித்துக் கொள்ளும் வேளையில்
என் காதலியுடன் ஒரு கூடல்!
நாளை மலர இருக்கும்
பிஞ்சுக் குழந்தைகளுடன் ஒரு நெருக்கம்!
பின்னிரவு வரை என் சகாக்களுடன்
நடத்திட வேண்டும் அரட்டை அரங்கம்!
அன்பு கலந்த அம்மாவின்
சமையலைத் தின்று விட வேண்டும் ஏப்பம்!
என என் நெஞ்சு ஏங்கும் ஏக்கம்
இறைவா உனக்காயினும் கேட்கிறதா?
~