DreamLand

Tuesday, August 07, 2007

அவள்!

மான் மயங்கும் விழிகள்!

தேன் நிறைந்த இதழ்கள்!

கார்மேகம் கண்டு ஏங்கும் கருங்கூந்தல்!

சந்தனச் சிலையோ வெனவென் சிந்தையைக் குலைக்கும் நிறம்!

அம்புதனின் கூர்மைக்குச் சவால் விடும் பார்வை!

வில்லின் வழைவுகளைக் குறைத்துக் காட்டும் இடை!

பட்டின் மென்மைக்கு மேலான மிருதுவான பாதம்!

செம்பருத்திப் பூக்களின் மகரந்தம் கொண்டு செதுக்கி இழைத்த தேகம்!

அழகு என்ற சொல்லுக்கு இலக்கனம் அவள்!

அன்பு என்ற சொல்லின் அவதாரம் அவள்!

என் சிரத்தினை அறுத்திடினும், கருத்தினில் அவள் நிலைத்திருப்பாள்!

~

0 Comments:

Post a Comment

<< Home