சென்னை - 376
போட் கிளப் இருக்கற இடம் அடையாறு
சென்னைக்கு ஒரு அடையாளம் இந்த கூவம் ஆறு!
கோயம்புத்தூர் காரனுக்கு நீலகிரி,
சென்னை மக்களுக்கு இருக்கு ஏலகிரி!
எங்களுக்கு தண்ணி தர்றது ஏரி,
அது வறன்டா எங்க பொயப்பு ஆயிடும் நாரி!
பாரின் கம்பனிங்கொ இருக்கறது omr-உ
பாரின் சரக்கு கிடைக்கிறது பர்மா பஜாரு
ஆனா லோக்கல் சரக்கு மட்டும் கிடைக்கும் தெருவுக்கு தெருவு !
csk-னு வந்தா விசில் அடிப்போம்,
சண்டைன்னு வந்தா ஆள அடிப்போம்,
பிரண்ட்ஸ் ஒன்னா சேர்ந்தா, டீ மட்டும்தான் குடிப்போம்!
Fresh -ஆ மீன் கிடக்கற இடம் காசிமேடு
late -ஆ போனாலும் கிடைக்கும் கருவாடு!
port -உ இருக்கற இடம் என்னூரு,
ரொம்ப நல்லது நம்ம கபாலி கோயில் துன்னூரு!
கவுச்சி துன்னறவனுக்கு தலைக்கறி
அய்ய மார்களுக்கு நெய் ஊத்தின வடகறி!
மெரினா / பெசன்ட் நகர் தான் எங்களுக்கு பீச்சு,
லைட் ஹவுஸ் டவர் மேல ஏறி நின்னு வாட்சு,
காலைல வாட்சுணா ஒரு குரூப் working out,
சாயங்காலம் வாட்சுணா,ஒரு குரூப் making out!
இப்படி பண்றீங்களேம்மா இது தப்பில்லயான்கறது என்னோட டவுட்டு!
டீயில அமுக்கி தின்னுவோம் பண்ணு,
அழகுன்னா, அது ஒன்லி சென்னை பொண்ணு,
லைன கிராஸ் பண்ணினா கட்டிடுவாங்க உனக்கு டின்னு!
மீன்பாடி வண்டி ஓடற இடம் வியாசர்பாடி,
நம்ம நாட்டோட பிரதமர் mr.modi,
அவர வீடு தேடி வர வைப்பாங்க நம்ம chief -லேடி!
எல்லா இடத்துலயும் கிடைக்கும் கொத்து
எங்களுக்கு பிடிச்ச பாட்டு குத்து
மித்த city எல்லா வெத்து
சென்னை -னா செம கெத்து!