வேண்டாம் இன்னும் ஒரு போர் எங்கேயும்!
வேண்டாம் இன்னும் ஒரு போர் எங்கேயும்!
குருதி பெருகி ஆறாக ஓடும்!
கரங்கள் கால்களை இழந்த
வீரனின் வாழ்வு முடமாகும்!
கடகியும், காதலியும்,
தந்தையும், தாயும்,
தான் பெற்ற பிள்ளைகளும்,
கலங்கி நிற்பர் என்ற எண்ணத்துடன்
வீரனின் இறந்த உடல்
காய்ந்த மலரினை போல் நிலத்தினில் விழும்!
இணைசேதம் என்று,
தேசத்தின் மக்களும் செத்து மடிவர்!
பொருளாதாரம் பாதாளம் நோக்கி பாயும்!
போரில் இருந்து மீண்டு வர ஒரு தசாப்தம் ஆகும்!
வாழ்விழந்த வீரனுக்கும்,
வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கும்,
அது வாழ்நாள் சாபம் ஆகும்!
பின்னுடல் எரிந்த நிலையில்,
தன்னுடல் மறைக்க ஆடை இன்றி
நிர்வாணமாய், கண்ணில் நீர்க்கோலமாய்,
ஓடி வந்த சிறுமியின் புகைப்படம் ஒன்று,
போரின் கோர முகத்தை காட்டி,
வியட்நாம் போரின் முடிவுக்கு துவக்கமாய் இருந்தது!
வேண்டாம் இன்னும் ஒரு போர் எங்கேயும்!
இன்று வியட்நாம் போர் முடிந்த 50 ஆம் ஆண்டு நினைவு நாள்(30-Apr-1975)!
0 Comments:
Post a Comment
<< Home